Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

தனித்தலையும் செம்போத்து
-4 %
நினைவுகளின் விரட்டலுக்கும் எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்துக்கும் இடையில் நிகழும் தர்க்க அல்லது அதர்க்கப் பாய்ச்சல் செந்தியின் கவிதைகள். நேற்றிலிருந்து நாளையையும் நாளையிலிருந்து நேற்றையும் எடை போட்டுப் பார்க்கும் இன்றைய மனம் அவருடையது. இடப்பெயர்ச்சிகளின் தத்தளிப்பு அவருடைய மனநிலை. ‘எங்குதான் இருக்..
₹86 ₹90
தனிமைத் தளிர்
-5 %
பெருமழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்தபடி கிடக்கும். உடன் எல்லோரும் பழங்களையும், காய்களையும், குச்சிகளையும் பொறுக்க வருவார்கள். ..
₹760 ₹800
தனிமையின் நூர் வருடங்கள்
-4 % Out Of Stock
இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவிட்டால் எல்லாமும் அர்த்தமில்லாமல் அழிந்துவிடலாம். (ஆனால்) அவ்வாறு அழிந்துவிடாமல் காப்பதற்கான மனித மனங்களின் யத்தனங்களை மலையாளமொழியின் பல எழுத்தாளுமைகளும் முயன்றபடியே இருக்கின்றனர். இந்தப் படைப்புகள் அவற..
₹86 ₹90
தனிமையின் நூறு ஆண்டுகள்
-5 %
ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உற..
₹523 ₹550
தமிழக அரசியல்: காலச்சுவடு கட்டுரைகள் (2001-2011)
-5 %
2008ஆம் ஆண்டு காலச்சுவடு 100ஆம் இதழ் வெளிவந்த நிலையில் திமுக அரசாங்கம், அரசு நூலகங்களில் அதைத் தடைசெய்தது. தடையை எதிர்த்து இந்திய அளவில் பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்தார்கள். உயர் நீதிமன்றம் 2010இல் இதழை மீண்டும் நூலகத் துறை வாங்கிட உத்தரவு பிறப்பித்தது. இந்தப் பின்னணியில் தமிழக அரசியல் சார்ந்த கா..
₹371 ₹390
தமிழக ஓவியங்கள்
-5 %
தமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பாரம்பரியம் பற்றிய ஒரு தீர்க்கமான பயணத்தில் வாசகரை இந்நூல் இட்டுச் செல்கிறது. குடைவரை கோவில் ஓவியங்களும் மன்னர்கள் கட்டிய ஆலயச் சுவ..
₹561 ₹590
தமிழகத்தின் ஈழ அகதிகள்
-5 %
ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ் உணர்வுக்கும் இது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு அகதிகளாக முகாம்களில் வாழும்  தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவத..
₹124 ₹130
தமிழகத்தில் அடிமைமுறை
-5 %
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆ..
₹209 ₹220
தமிழகத்தில் கல்வி
-5 %
தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான வெ. வசந்திதேவியுடன் கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினை குறித்து நிகழ்த்திய நீண்ட உரையாடலின் நூல் வடிவம். ‘கல்வி மன..
₹238 ₹250
தமிழகத்துக்கு அப்பால் தமிழ்
-5 %
எல்லைகளற்ற தமிழ்ப் பரப்பில் இலக்கியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகவும் சீர்மையுடனும் பங்களித்து வருகிற பதினான்கு எழுத்தாளர்களுடனான நேர்காணல்களின் சிறப்பான தொகை நூல் இது. நூலில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் நமது அறக்கட்டுப்பாடு, தன்வரலாற்றுக்கும் சமூக வரலாற்றுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் பற்றியும் விர..
₹361 ₹380
தமிழரின் உருவ வழிபாடு
-5 %
தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம். அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு திணிப்பின்றித் தகவமைத்துக்கொண்டது என்பதைச் செறிவாகப் பேசுகிறது இந்நூல். ‘கந்து - கந்திற்பாவை - பாவை - நெடும்பாவை’ எனத் ..
₹119 ₹125
தமிழர் உணவு
-5 %
காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற..
₹451 ₹475
Showing 661 to 672 of 1274 (107 Pages)